மலையாள கிருஷ்ணய்யர் பாடசாலையில் குரு பூர்ணிமா சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2015 12:08
சோழவந்தான்: சோழவந்தான் மலையாள கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு யாகபூஜை நடந்தது.ஸ்ரீவேதவியாசரின் உருவபடம் வீதியில் பவனி வர பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின் வேத பாடசாலையில் வரதராஜ்பண்டிட் தலைமையில் மலரஞ்சலி மற்றும் தீபாராதனை நடந்தது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் குருபூர்ணிமா ஹோமம் மற்றும் யாகபூஜை நடந்தது.