வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் சித்தர்பீடம் உள்ளது.அடிபெருக்கை முன்னிட்டு யாகசாலை சிறப்பு பூஜைகள், சித்தர்பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நாயகன் சுவாமிகள் தலைமையில் மருத்துவ முகாமும் நடந்தது. சித்தர் பீட டிரஸ்ட் தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். நிர்வாக அறங்காவலர் விஜயபாஸ்கர் வரவேற்றார். திருவள்ளுவர் இலக்கிய மன்ற தலைவர் தனபாலன், நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.