பத்ரகாளியம்மன், தர்மமுனீஸ்வரர் கோவிலில் ஆடி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2015 12:08
கீழக்கரை: கீழக்கரை அருகே ஸ்ரீநகர் பத்ரகாளியம்மன், தர்மமுனீஸ்வரர், விநாயகர் கோயிலின் 15 ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா, கடந்த ஜூலை 28 ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை 9 மணியளவில் நினைத்ததை முடிக்கும் சித்திவிநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அக்னிச்சட்டி, ஆயிரம் சர விளக்கு சட்டியுடன் கோயிலை வலம் வந்தனர். பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீநகர் பொதுநலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.