Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கோட்டை மாரியம்மன் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன்! கோட்டை மாரியம்மன் கோவிலில் அங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்கினி மாலையம்மன் கோயிலில் எரியும் நெருப்பில் இறங்கும் பெண்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2015
01:08

திருநெல்வேலி : சங்கரன்கோவில் அருகே மாவிலியூத்து அக்கினி மாலையம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் 108 முறை எரியும் நெருப்பில் இறங்கினர்.

Default Image
Next News

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது மாவிலியூத்து கிராமம். இங்குள்ள அக்கினிமாலையம்மன் கோயில் விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் தீக்குண்டம் விழாவில் மரக்கட்டைகளை தீயிட்டு அதில் பெண்கள் ஏறிச்செல்லும் நிகழ்வு மெய்சிலிர்க்கச் செய்கிறது. வழக்கமான தீமிதி விழாக்களில் கட்டைகளை தீயிட்டு சாம்பலான கங்குகளில் மிதிப்பார்கள். ஆனால் மாவிலியூத்து கோவில் விழாவில் கட்டைகளை அடுக்கி எரியும் தீ ஜூவாலையில் ஏறுகிறார்கள்.

1800களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த போர் ஒன்றில் மாவிலியூத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பங்கேற்று இறந்தார். கணவன் இறந்ததால் அவரது மனைவி, கணவர் இறந்த துக்கம் தாளாமல் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துள்ளார். அந்த பெண்ணை பின்னர் அக்கினி மாலையம்மனாக கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். அந்த பெண் தெய்வத்தின் கொடை விழாவில் பெண்கள், தீக்குண்டம் மிதித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதற்காக சங்கரன்கோவிலையடுத்துள்ள வன்னிக்கோனேந்தல், குருக்கள்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார ஏழு கிராம மக்கள் 48 நாட்கள் விரதம் இருந்து விழாவில் பங்கேற்கின்றனர். தீயில் இறங்கும் பெண்கள் இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும் தீக்குண்டத்தில் இறங்குகின்றனர். ஒரே பெண்மணி 108 தடவைகள் தீயில் இறங்குகின்றனர். இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூடியிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar