பதிவு செய்த நாள்
06
ஆக
2015
12:08
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் திருபுரசுந்தரி அம்மன் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் நாளை துவங்கி, 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவிலின் அம்பாள் கோவிலாக, பக்தவத்சலேஸ்வரர் - திரிபுரசுந்தரி அம்மன் கோவில் விளங்குகிறது. இதன் முக்கிய உற்சவமான ஆடிப்பூர உற்சவம், நாளை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, இன்று, இரவு 9:00 மணிக்கு விக்னேஸ்வரர் வழிபாடு நடக்கிறது.ஆக., 9ம் தேதி, அதிகார நந்தி உற்சவமும்; ஆக., 13ம் தேதி, திருத்தேர் உற்சவமும்; ஆக., 16ம் தேதி, சங்குதீர்த்தக்குள தீர்த்தவாரி உற்சவமும்; ஆக., 17ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், நடைபெற உள்ளன.