ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை சந்தன மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைபாரிகளை எடுத்து வந்து கோயிலில் வைத்து பெண்கள் வழிபட்டனர். பின்னர், அவற்றை பெண்கள்ஊர்வலமாக எடுத்து சென்று அரசூரணி பகுதி குளத்தில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். சூரியான்கோட்டை, பனிதிவயல், ஏந்தல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள முத்து மாரியம்மன் கோயில்களிலும் முளைப்பாரி விழா நடைபெற்றது.