காஞ்சிபுரம்:மதுராந்தகம் அடுத்த, கெண்டிரச்சேரி செல்லியம்மன் கோவில் ஆடி திருவிழாவில், நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி, காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.நேற்று முன்தினம், பகல் 1:00 மணியளவில், செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 11:00 மணியளவில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றன. அதை தொடர்ந்து, இரவு 12:00 மணியளவில், அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை கிராம பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.