பதிவு செய்த நாள்
13
ஆக
2015
11:08
தஞ்சாவூர்: “கும்பகோணம் மகாமக திருவிழாவுக்காக, 160 கோடி ரூபாய் செலவில், அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன,” என, தஞ்சாவூர் கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், மகாமக திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை, கலெக்டர் சுப்பையன், நேற்று ஆய்வு செய்தபின், நிருபர்களிடம் கூறியதாவது: மகாமக திருவிழாவுக்காக, 160 கோடி ரூபாய் செலவில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் நிதி பெற்று, விழாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பக்தர்கள், கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடி, பொற்றாமரை குளத்திலும், காவிரி ஆற்றிலும் நீராடுவர். எனவே, அரசலாற்றிலிருந்து, மகாமக குளத்திற்கு, நீர் வரும் பாதையில், 400 மீ., துாரத்துக்கு உள்ள அடைப்புகள், கழிவுகள் அகற்றப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.