பதிவு செய்த நாள்
14
ஆக
2015
11:08
ஜீவன்பீமா நகர்: ஜீவன்பீமா நகர் அன்னை ஆதிபராசக்தி, 32ம் ஆண்டு விழா, 25வது இலவச திருமண விழா, பச்சை பூக்கரகம், 90 அடி உயர தேர் பவனி என, 23ம் தேதி வரை விழாக்கள் நடக்கவுள்ளன. முதல் நாளான நேற்று இரவு, 8:00 மணிக்கு காப்பு கட்டுதல், எல்லை பூஜை; இரண்டாம் நாளான இன்று காலை, முக்கிய வீதிகளில் கஞ்சி கலய ஊர்வலம், கஞ்சி வார்த்தல்; மூன்றாம் நாளான, 15ம் தேதி, காலை, பால்குட ஊர்வலம், 8,000 லிட்டர் பால், அன்னைக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வரும், 17ம் தேதி காலை, மேல் கலச விளக்கு வேள்வி பூஜை, மகா கும்பாபிஷேகம்; 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, முக்கிய வீதிகளில் பச்சை பூக்கரக ஊர்வலம். ஆறாம் நாளான, 23ம் தேதி காலை, 6:30 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை, 10:00 மணிக்கு இலவச திருமண விழா, 11:00 மணிக்கு, அன்னையின், 90 அடி உயர தேர் பவனி நடக்கிறது. விழா நாட்களில், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிறுவனர் நாராயணப்பா செய்து வருகிறார். இக்கோவிலுக்கு வ ருபவர்கள், மெஜஸ்டிக்கிலிருந்து, 138, 138டி; சிவாஜி நகரிலிருந்து, 139, 197; ஜெயநகரிலிருந்து, 201ஜி, 201ஜெ, 201எம் பேருந்தில், ஜீவன்பீமா நகர் கடைசி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.