கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மயிலே மயிலே நீ ஆடு - எங்கள்மன்னவன் புகழை நீ பாடுகோட்டையை ஆளும் கோமகனைகோடி நலங்கள் தருபவனைபாட்டினில் வாழும் பாவலனைபாதம் பணிந்தே நான் பாட (மயிலே)சோலைக் குயில்கள் இசைபாடகாலைக் கதிரவன் ஒளி ஏற்றமாலைகள் சூடி வந்திடவேமாயக் கருப்பர் மகிழ்ந்திடவே (மயிலே)கருப்பண்ண சுவாமி மகிழ்ந்தாலேவிருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்அரும்புகள் மலர்ந்துமணம் வீசஅதுபோல் வாழ்வும் வளமாக (மயிலே)புரவியில் ஏறும் புரவலனைபுளிய மரத்தடிக் காவலனைஅரவணைத் தருளும் ஆண்டவனைஅவனடிபணிந்தே நாம் பாட (மயிலே)கோகுல கிருஷ்ணனின் அவதாரம்கோட்டைக் கருப்பர்எம் ஆதாரம்தந்திடுவார் அவர்தம் பாதாரம்இந்திரன் போல் பொருளாதாரம் (மயிலே)அரிவாள் ஏந்தி அன்புடனேஅறிவாய் எங்கள் அன்பினையேபரிமேல் ஏறும் பரந்தாமாபரிவாய் காப்பாய் பரம்பொருளே (மயிலே)சங்கத் தமிழால் நாம் பாடசங்கீதங்கள் இனிமை கூட்டசங்கிலிக் கருப்பர் சிலம்பாடசங்கடமெல்லாம் தீர்ந்திடவே (மயிலே)கோழிப் பூசை செய்திட்டால்காளியம்மாள் களிப்பெய்வாள்காரியமெல்லாம் சிறப்பாககவலைகள் பறந்து ஓடிடவே (மயிலே)கோட்டைக் கருப்பரை நினைத்தாலேகோவே வந்து காத்திடவேகோட்டைக் கருப்பர் அருளாலேகோடி நலங்கள் எம் வீடுவர (மயிலே)மங்கள் மேளம் கொட்டியேமங்கள ஹாரத்தி செய்தாலேமங்களம் எங்கும் பொங்கிடவேமங்கள வாழ்வு தங்கிடவே (மயிலே)