சேவல் கிடாகோழியினைச் சேர்த்து நாங்கள் படைக்கிறோம் சேர்ந்து ஆடித்திங்களிலே சிரத்தையுடன் பணிகிறோம் தேவைகளை அறிந்து நீயும் திடத்தைநாளும் அருளுவாய் சேவைகளை உனக்குசெய்து சிந்தைமகிழ வாழ்த்துவாய்!
பார்க்கும் உன்றன் பார்வையில் பறந்துவிடும் பேய்களே பாடி ஆடித் தொழுகையில் தொலைந்துவிடும் நோய்களே நாடிஉன்னைக் காணுகையில் நலங்கள்யாவும் வருகவே தேடிஉன்னைச் சேருகையில் கோடியின்பம் தருகவே!
சூழ்ந்துநிற்கும் சங்கிலியில் சுடர்விடும் கருப்பனே வாழ்ந்துவரும் எங்களுக்கு வளமைகளைத் தாருமே! எங்கள் குலம் நாளுமே இன்பமுடன் வாழ்ந்திட என்றும் நாங்கள் உனைப்பணிந்தோம் ஏற்றங்களைத் தாருமே!
புரவியிலே அமர்ந்துவரும் புண்ய கருப்பண்ணனே பறந்துவந்து எங்களையும் பார்த்தருள்வாய் என்றுமே மணமுவந்து உனைத் துதித்தால் மறுநொடியில் இன்பமே மங்காத நிலை வாழ்வு மனையுள் நாளும் தாங்குமே!