கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோட்டைக் கருப்பரே - எங்கள்கோட்டைக் கருப்பரே - எமக்குகொள்ளை இன்பத்தை -நாளும்கொண்டு தருவாயே! (கோட்டை)திருப்புத்தூரையே - காக்கும்திவ்ய கருப்பணே - உன்னைத்தினமும் போற்றினோம் - மனதில்திடத்தை தருவாயே (கோட்டை)கோட்டை மத்தியில் - நாளும்கொலு இருப்பவனே - என்றும்சாட்டை சொடுக்கியே - நீயும்சடுதி வருவாயே! (கோட்டை)கருப்பு வேஷ்டியும் - நல்லசிவப்புபட்டுமே - உனைக்காண்பவர் மனதை - நாளும்கவர்ந்து இழுக்குதே! (கோட்டை)முறுக்கு மீசையில் - நாளும்முறுவல் செய்வாயே - உளம்உருகிப் பாடுவோம் - எம்மைஉயர வைப்பாயே (கோட்டை)கயவர் செயல்களை - நாளும்களை எடுக்கவே - கையில்பிரம்பைக்கொண்டாயே - எங்கள்பிதற்றம் தீர்ப்பாயே! (கோட்டை)சின்னக் கருப்பரை - உந்தன்சிரத்தில் கொண்டாயே! - அழகுமுத்துக் கருப்பரை - எமக்குசொத்தாய் தந்தாயே! (கோட்டை)தலைப் பாகையை - நாளும்தாங்கி நிற்பாயே! - நீயும்வேட்டைத் தலைப்பாகை - தினமும்விரும்பி வைப்பாயே! (கோட்டை)பாவம் போக்கிட - நீயும்பறந்து வந்திட - இருபரிகள் இரண்டுமே - உடன்பகட்டாய் நிற்குதே! (கோட்டை)பார்க்கும் விழியிலே -பாவம்பறந்து ஓடுமே - நீயும்தேருக்குள் வந்து - எம்மைதினமும் காப்பாயே! (கோட்டை)