பதிவு செய்த நாள்
17
ஆக
2015
12:08
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, காலை 4:00 மணியளவில் நடராஜர் சன்னதியில் ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், வள்ளி தெய்வாணை சமேத சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளினர். மணமகன் வீட்டாராக வருவாய்த்துறையினர் சீர்வரிசை, திருமாங்கல்யம் எடுத்து வந்ததும், சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர், சுவாமிகள் உட்பிரகார வலம் சென்று, 28 ஆகம சன்னதி முன் காலை 5:30 மணிக்கு விருத்தாம்பிகை அம்மனுடன் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர், நுõற்றுக்கால் மண்டபத்திற்கு சுவாமிகள் ஊர்வலமாக வந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. காலை 6:00 மணியளவில் விருத்தகிரீஸ்வரர், தாயார் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமானோர் அட்சதை, மலர்கள் துõவி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு கொடியிறக்கம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.