விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2015 12:08
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி வரும் செப்.17ம் தேதி கொண்டாடப்படுகிறது. காரைக்காலில் பல இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தி கடலில் விடுவர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் வேகமாக நடந்து வருகிறது. நிரவியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் கூடத்தில் சிலைகள் தயாராகிறது. பேப்பர், கிழங்கு மாவு கூழ் கொண்டு விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு இறுதியாக வர்ணம் பூசப்படுகிறது. சிலைகள் 3 அடி முதல் 12 அடி வரை தயாரிக்கப்படுகிறது. ஆஞ்சநேயர்,சிங்க வாகனம், மூஞ்சுறு, ரிஷப வாகனம், சிவலிங்கத்தின் மீது விநாயகர் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு இறுதியாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றுவருகிறது.இந்த விநாயகர் சிலைகள் நாகை, திருவாரூர், வேதாரண்யம், திருப்பூண்டி, சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு விநாயகர் சதுர்த்திக்காக வாங்கிசெல்கின்றனர்.