காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2015 12:08
காரைக்கால்: காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு பெருவிழா மின் அலங்கார தேர்பவனி நடந்தது. காரைக்கால் மாதாக்கோவில் வீதியில் புனித தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 6ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.துõய மரியண்னை மேல்நிலைப் பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து தினந்தோறும் மாலையில் சிறிய தேர்பவனி, நவநாள் திருப்பலியும் நடைப்பெற்றது. நேற்று முன்தினம் இரவு மின் அலங்கார ஆடம்பர தேர்பவனி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆலய பங்கு தந்தை தலைமையில் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்தார்.இதில் 500க்கு மேற்பட்ட அருட்சகோதரிகள்,பங்குப்பேரவை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.