காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாத, நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் நேற்று திருமலா திருப்பதி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காரைக்கால் பாரதியசாலையில் உள்ள கயிலாசநாத மற்றும் நித்திய கல்யாணபெருமாள் கோவிலில் பகவான் பக்த ஜன சபா சார்பில் திருமலா திருப்பதி ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ நிவாஸ பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று காலை சுப்ரபாத சேவை,திருமஞ்சன,தோமாலை சேவை,மாலை பக்தர்களுக்காக காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் நாதஸ்வர கச்சேரி,வேத பாராயணம்,நாட்டியாலயா வழக்கும் பரத நாட்டியம் நடைபெற்றது.திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வல்லவன்,கோவில்நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைதம்பி,வாரியத்தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.