புதுச்சேரி: முத்துமாரியம்மன் கோவிலில் திரு ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. புதுச்சேரி வினோபா நகர் முத்துமாரியம்மன் கோவில் திருவாடி பூரம் விழா நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் தலைவர் நாகமணி, துணைத் தலைவர் குப்பன், செயலாளர் மணிராஜ், பொருளாளர் சத்தியபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.