புதுடில்லி : புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாம் மக்களின் வசதிக்காக, டில்லி, மும்பை, கொச்சி, ஸ்ரீநகர், பனாஜி, நாக்பூர், ஐதராபாத் ஆகிய 7 நகரங்களிலிருந்து சவுதியின் ஜெட்டா நகருக்கு 230 சிறப்பு விமானங்களை இயக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விமான சேவையின் மூலம் 38 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலிருந்து ஜெட்டா நகருக்கு இந்த விமான சேவை செப்.,17ம் தேதி வரையும், ஜெட்டாவிலிருந்து இந்தியா வர அக்.,28ம் தேதி வரை விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.