சரவணம் என்றால் தர்ப்பை. பவ என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் சரவணபவ என பெயர் வந்தது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த தீப்பொறிகள், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கையை அடைந்தன. அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. பார்வதிதேவி. அவர்களை ஒரே குழந்தையாக்கினாள். ஆறு முகம், பன்னிரண்டு கையுடன் முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.