பதிவு செய்த நாள்
19
ஆக
2015
12:08
கோபி: கோபி, வீரபாண்டி கிராமம் அருகே புதுப்பாளையத்தில், படையாச்சி மாரியம்மன் கோவிலில், நாளை (20ம் தேதி) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. கடந்த, 14ம் தேதி காலை, 6 மணிக்கு, யாகசாலை, முகூர்த்தகால், பாலிகை போடுதல் நடந்தது. 17ம் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, இரவு, 10 மணிக்கு பவானி கூடுதுறையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு, கரட்டூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, பம்பை மேளத்துடன் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். இதில், புதுப்பாளையம், சீத்தாலட்சுமி புரம் மற்றும் பச்சமலை ரோட்டை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (19ம் தேதி) காலை, 9 மணிக்கு விஷேச சந்தியாக பூஜை, பூர்ணாகுதி, மஹா தீபாராதனை, இரண்டாம் காலயாக பூஜை நடக்கிறது. நாளை காலை, 5.30 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், 6 மணிக்கு பஞ்சமுக விநாயகர், படையாச்சி மாரியம்மன் மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையடுத்து அன்னதானம் வழங்கப்படுகிறது.