திறமைசாலிகளை ஜாம்பவான் என்று எல்லாரும் பாராட்டுவர். ராமாயணத்தில் கரடி முகத்துடன் இருக்கும் பாத்திரம் ஜாம்பவான். அந்த ஜாம்பவான் வாமன அவதாரத்தைப் பாராட்டியுள்ளார். கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவது தான் திருமாலின் அவதார நோக்கம். ஆனால், வாமன அவதாரத்தில், அவர் யாரையும் கொல்லவில்லை. தன் திருவடியை மட்டும் பலியின் தலை மீது வைத்து ஆணவத்தைப் போக்கி அருள் புரிந்தார். அப்போது அங்கிருந்த ஜாம்பவான் வாமனரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பறை முழக்கி வலம் வந்து வணங்கினார்.