பதிவு செய்த நாள்
22
ஆக
2015
12:08
கும்பகோணம்: கும்பகோணம் அருகே, அசூர் மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக, அரசு சார்பில், 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. கும்பகோணம் அருகே, அசூர் ஆதிதிராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நன்கொடையாளர்கள் மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆதி திராவிடர் திருக்கோவில் திருப்பணி நிதி உதவி திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து, காசோலையை, தஞ்சை எம்.எல்.ஏ., ரங்கசாமி திருப்பணி கமிட்டியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சின்னையன், ஒன்றிய குழு தலைவர் மகாலிங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.