பதிவு செய்த நாள்
24
ஆக
2015
10:08
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரியில் நடைபெற்ற வள்ளி - முருகன் திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 7:00 மணியளவில், வள்ளி, மணவாள பெருமான் உற்சவருக்கு, சிறப்பு அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை, 9:00 மணியளவில், திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமண வரம் வேண்டி மாலையுடன் வந்த ஆண் மற்றும் பெண்கள், சுவாமிக்கு அந்த மாலையை அணிவித்து, பிரசாதமாக பெற்று சென்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றனர்.