விழுப்புரம்: விழுப்புரம் கீழ்மேல் அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, 8:45 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு விமான கும்பாபி÷ ஷகம் நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு பூமாரியம்மனுக்கு கும்பாபி@ஷகம், பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு பூ மாரியம்மன் வீதியுலா நடந்தது. இதில் மயிலம் பொம்மபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் 20வது பட்டம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை கைலாசநாதர் கோவில் சிவாச்சாரியார் வைத்தியநாதன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.