வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர் பாளையம் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணி முதல் வாரம், திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு, 8ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு, கிராம தேவதை பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டனர். மாலை 4:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.