பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
அம்மையார்குப்பம்: கிருபானந்த வாரியாரின், 110வது பிறந்தநாளை ஒட்டி, அம்மையார்குப்பம் வாரியார் மடத்தில், இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை, ‘வாசம் அறக்கட்டளை’ மேற்கொண்டுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில், கிருபானந்த வாரியார், பல்வேறு ஆன்மிக பணிகளை முன்னின்று நடத்தியுள்ளார். 109வது பிறந்த நாளில்...அவருடன் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டிருந்த கிராமவாசிகள், வாரியாரின் நினைவாக, அறக்கட்டளை துவங்கி நடத்தி வருகின்றனர். இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வாரியாரின், 109வது பிறந்த நாளில், கிராமத்தின் வடக்கே உள்ள சாந்த மலை அடிவாரத்தில், வாரியார் ஆசிரமம் புதிதாக திறக்கப்பட்டது.
ஆசிரமத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கிருபானந்த வாரியார், 110வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, வாரியார் சுவாமிகள் அறக்கட்டளை (வாசம்) தலைவர் மற்றும் நிறுவனர் சுந்தரவேல் மேற்கொண்டு உள்ளார். காலை 9:00 மணிக்கு, வாரியார் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.
திருவுருவப்படம் காலை 11:00 மணிக்கு கதாகாலட்சேபம், அதை தொடர்ந்து அறக்கட்டளை நிர்வாகிகளின் பக்தி பாடல்கள் பஜனை இடம் பெறுகிறது. மாலை 6:00 மணிக்கு, கிருபானந்த வாரியார் திருவுருவப்படம் உள்புறப்பாடு நடக்கிறது.