பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூரண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.
திருப்புத்தூர் பெரியகண்மாய் கரையில் திருப்புத்தூர்,தம்பிபட்டி,புதுப்பட்டிக் கிராமத்தினருக்கு பாத்தியப்பட்ட குளங்கரை காத்த அய்யனார் கோயிலில்தற்போது 50 ஆண்டுகளுக்குப் பின் தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. பழைய கோயில் முற்றிலுமாக
அகற்றப்பட்டு,புனருத்தாரணம் செய்யப்பட்டு, திருப்பணி நடந்துள்ளது.
மூலவருக்கு கர்ப்பகக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் எழுப்பப் பெற்று, மூலவருக்கு விமானம், பரிவாரத் தேவதைகளுக்கு தனி சந்நிதி,புதிய இரண்டு சேமக்குதிரைகள் உள்ளிட்ட ரூ 70 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் நடந்துள்ளன. கும்பாபிஷேகம் ஆக., 27ல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை யாகசாலை பூஜை துவங்குகிறது.
அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 8 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, நாளை காலை 7.20 மணிக்கு 2ம் யாகசாலை பூஜை, மாலை 4 மணிக்கு 3ம் யாகசாலை பூஜைகளும் நடைபெறுகின்றன. ஆக.27ம் தேதியன்று காலை 7 மணிக்கு 4ம் காலயாகசாலை,
பூஜைகள் துவங்குகின்றன. கும்பாபிஷேகம் காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்கின்றனர்.