ஆனைமலை: ஆனைமலை பாலாற்றங்கரை ஆஞ்ச நேயர் கோவிலில், மஹாசம்ப்ரோக்சன ஆறாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதையடுத்து, கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனைமலை அடுத்துள்ள சண்முகபுரம் பாலாற்றின் மத்தியில், தொன்மை வாய்ந்த ஆஞ்சநேயர்கோவில் உள்ளது. கடந்த ஆறாண்டுகளுக்கு முன், இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தப்பட்டது. இதையடுத்து மஹாசம்ப்ரோக்சன ஆறாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு யாக பூஜை நடத்தப்பட்டு ஆஞ்சநேய மூலமந்திர ேஹாமம் வளர்க்கப்பட்டது. காலை, 9:00 மணிக்கு மகா அபிேஷகம் மற்றும் கலசாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, 10.00 மணிக்கு மேல் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை சாற்றுமுறையும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத வினியோகமும் நடந்தன. தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது.