அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை-பந்தல்குடி தேசிய நெடுஞ்சாலை அருகில் அன்பு மாடல் நகரில், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கான பூமி பூஜை நடந்தது. சென்னை பூந்தமல்லி கோணிசாமி துவக்கி வைத்தார். நடிகர் ரஜனிகாந்த் வளர்ப்பு தந்தை கல்யாணசுந்தரம், ஜெயவிலாஸ் தொழில் அதிபர் வரதராஜன், தொழில் அதிபர் ரத்தினவேலு பேசினர். ஏற்பாடுகளை பந்தல்குடி சாய்ராம் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்தனர்.