Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணருக்கு ஜாதகம் கணிக்கும் ... கேட்டதும் கொடுப்பவனே... கிருஷ்ணா... கிருஷ்ணா.. கேட்டதும் கொடுப்பவனே... கிருஷ்ணா... ...
முதல் பக்கம் » துளிகள்
யாரிடம் எதைக்கூற வேண்டும்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
யாரிடம் எதைக்கூற வேண்டும்?

பதிவு செய்த நாள்

02 செப்
2015
04:09

ஒரு ஊரில் பெரிய குரு ஒருவர்இருந்தார். அவர் முற்றும் துறந்தவர், எல்லாம் கற்றவர்.  அவரை ஒரு பிரசங்கம் செய்<ய கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.  அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் ப<யங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.  குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறை<யத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.என்னப்பா பண்ணலாம்‘ னு கேட்டார்.  அய்யா! நான் குதிரைக் காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.  ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க. நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும் தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்  என்றான். அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.  அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு சபாஷ் போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணி<யம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. எப்படிப்பா இருந்தது என் பேச்சுனு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.  அய்யா நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க. நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன் என்றான். அவ்ளோதான் குரு அவனைப் பார்த்து மிரண்டு விட்டார்.

நீதி: மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar