வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. இதே போல் அக்காமலை பாலாஜி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை விஸ்வ இந்துபரிஷத் -தர்மபிரசார் சமிதி சார்பில், கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த விழாவிற்கு, சமிதியின் தலைவர்கள் நாகராஜ், சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர்கள் நாட்ராயசாமி, காமாட்சி முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் வரவேற்றார். விழாவில் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.எஸ்டேட் பகுதியிலிருந்து பால்குடம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன.