சங்கீதத்தில் சிறந்து விளங்கிய புரந்தரதாசர், ஒரு சமயம் கர்நாடகாவிலுள்ள தொட்டமளூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் நடை சாத்தி விட்டனர். மனம் வருந்திய அவர் கோவிலுக்கு வெளியே நின்று மனம் வருந்தி“ஜகத்தோத்தாரணா என்ற பாடலைப்பாடினார். உடனே அக்கோவிலின் எல்லாக் கதவுகளும் தானாகவே திறந்து கொண்டன. சன்னிதிக்குள் தவழ்ந்த கோலத்தில் இருந்த கண்ணன், தன்திருமுகத்தைத் திருப்பிப் புரந்தரதாசருக்கு காட்சியளித்தான். கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் இங்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. பெங்களூரு- மைசூரு ரோட்டில் 60 கி.மீ., துõரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் இந்தக்கண்ணனை வேண்டி பலன் பெறலாம்.