பதிவு செய்த நாள்
08
செப்
2015
12:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெருமாள், கண்ணன் ஊர்வலம் மற்றும் உறியடி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றன. வரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், கண்ணனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணியளவில், கண்ணன் சேஷவாகனத்தில் மாடவீதியில் உலா வந்தார். மாலை, 5:30 மணியளவில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியாருடன் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, மாடவீதியில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, அஸ்தகிரி தெருவில், இரவு 8:00 மணியளவில், சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின், வரதராஜ பெருமாள் ஆனைகட்டி தெரு வழியாக வந்து, இரவு 9:00 மணியளவில், கோவிலை அடைந்தார்.