Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெயிலுகந்த விநாயகர் கோயிலில் ... திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படும் சிற்பங்கள்! திருப்பணி என்ற பெயரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சத்தின் மூலம் நீதிபோதித்த ‘காவல்தெய்வங்கள்!
எழுத்தின் அளவு:
அச்சத்தின் மூலம் நீதிபோதித்த ‘காவல்தெய்வங்கள்!

பதிவு செய்த நாள்

09 செப்
2015
11:09

ஆன்மிகத்தோடு, நல்ல நடத்தைகளை வாழ்வில் புகட்டிய, முன்னோர்களின் அறிவுக்கு சான்றாக ’பூதகனவழிபாடு’ இரண்டாயிரம் ஆண்டுகளை  கடந்தும் நடந்து வருகிறது. கோவில் வளாகங்களில், கோபத்துடன் நிற்பது போலவும், அமர்ந்த நிலையிலும் அமைக்கப்படும் பிரமாண்ட சிலைகள்  ’பூதகனங்கள்’ என அழைக்கப்படுகிறது. இந்த சிலைகளுக்கு இணையாக குதிரை வாகனங்களும் இருக்கும். ஆன்மிகத்துடன் நீதி, ஒழுக்கம்,  நன்னடத்தை, நல்ல பண்புகளை மக்கள் மனதில் விதைப்பதற்காக பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த சிலைகள் கோவில்களில் அமைக்கப்படுகின்றன.

இலக்கியத்தில் முக்கிய இடம் பிடித்த பூம்புகார் நகரத்தில், ’இந்திரவிழா’ நடக்கும்  28 நாட்களில் ’பூதகனவழிபாடு’ மிக முக்கியமானதாகவும், சிறப் பாகவும் இருந்தது. இந்த நகரத்து மக்கள் ’சதுக்கபூதம்’, ’அங்காடிபூதம்’ என்ற இரு பூதங்களை தெய்வங்களாக வணங்கினர். மடித்த வாயும், தொ ங்கும் நாக்கும், வாயிலிருந்து வெளிவந்துள்ள கடவாய்பற்களுமாக பயங்கர வடிவில் அமைக்கப்பட்ட இந்த பூத சிலைகளுக்கு, நெய்யில் சுட்ட  பனியாரங்களும், எள்ளுருண்டைகளும் படையலிட்டு வழிபட்டனர்.

இந்த வழிபாட்டுதலம் ’பூதசதுக்கம்’ என அழைக்கப்பட்டது.  தங்களுக்கு நியாயம் கிடைக்க இதில் முறையிடுவது என்பது அன்றைய தெய்வ  முறையீடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தவறு செய்பவர்களை சதுக்கத்திலுள்ள பூதம் தண்டிக்கும் என பக்தர்கள் நம்பினர். பூம்புகார் நகர் இருந்த  காலத்திலேயே இந்த வழிபாடு சிறப்புடன் இருந்துள்ளது. இந்த ’பூதகனவழி பாட்டின்’ தொடக்ககாலம் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.  இந்த அளவு காலத்தால் மிகவும் தொன்மை வாய்ந்த வழிபாடு இன்றும் உள்ளது. கிராமக்கோவில்கள் அனைத்திலும் இந்த பூதகனங்களும், வாகன ங்களும் அமைக்கப்படுகின்றன. கோவிலையும், ஊரையும் இவை காப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலுக்குச்செல்லும் பெரியவர்கள், த ங்களுடன் வரும் குழந்தைகளிடம், தவறு செய்தால் சாமி...கண்ணை குத்தும், தண்டிக்கும்... எனக்கூறி இந்த சிலைகளை காட்டும் போது, மிக பி ரமாண்ட உருவத்தில் கோபாவேசமாக உள்ள இந்த சிலைகள், குழந்தைகள் மனதில் அச்சத்தோடு தவறு செய்யக்கூடாது என்ற உணர்வையும்  ஏற்படுத்துகிறது.

சிறுவயதில் மனதில் பதிந்த இந்த பயஉணர்வு, மக்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபடாமல் ஓரளவு தடுத்தது. உளவியல் ரீதியாக மனிதர்களிடம் விதைக்கப்பட்ட இந்த உணர்வு பல தலைமுறைகளை கடந்து இன்றும் உள்ளது. மடத்துக்குளம் பகுதியிலுள்ள சில  கோவில்களில், ‘பூதகன சப்பார ஊர்வலமும்’ நடக்கிறது. இதற்கு சிறப்பு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுவதோடு, விசேஷ பூஜைகளும் நடத்தப் படுகின்றன.  மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில், ‘பூதகனங்களை’ காட்டி பயஉணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் அடிப்படை  ஒழுக்கத்தை முன்னோர்கள் கற்பித்தனர். சிறு வயதில் மிரட்டும் தோரணையில், அச்ச உணர்வை ஏற்படுத்திய இவற்றின் மீது இன்றும், மரியாதை  உணர்வு ஏற்படுகிறது’ என்றனர். காவல் தெய்வங்கள் தங்களை விட பலமடங்கு உயர்ந்தது, சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்த,  பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இதுபோன்ற பிரம்மாண்ட சிலைகளை அமைத்து மனிதர்கள் வழிபடத்தொடங்கினர். இதுவே பின்னாளில் ’பூ தகனங்கள்’ என்றானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar