சோழவந்தான்: தென்கரை அக்ரஹார சத்யபாமா, ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் கோயிலில், கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை தேவியர்களுடன் சுவாமி கிருஷ்ணன் ஆடிவீதியில் எழுந்தருளினார். திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாதஸ்வரம் முழங்க பக்தர்கள் சீர்வரிசை ஏந்தி ஊர்வலம் வந்தனர். பின், வேதம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.