பதிவு செய்த நாள்
11
செப்
2015
10:09
மேட்டுப்பாளையம்: காரமடையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், உறியடி உற்சவம் நடந்தது. காரமடையில் சந்தானவேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா மூன்று நாட்களுக்கு நடக்கும். இந்தாண்டு, கடந்த 5ம் தேதி, விழா துவங்கி யது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. இறுதி நாளில், சத்தியபாமா, ருக்குமணி சமேதராக சந்தான வேணுகோபால சுவாமியின் திருவீதி உலா, நான்கு ரத வீதிகள் வழியாக நடந்தது. அப்போது கார் ஸ்டாண்ட் அருகே சுவாமி முன் உறியடி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. பின், கோவிலில் சுவாமி முன் பெருமாள் திருமொழி பிரபந்த சேவை, சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஸ்தலத்தார்கள், மிராசுதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.