பதிவு செய்த நாள்
11
செப்
2015
12:09
தர்மபுரி: தர்மபுரி, எம்.ஜி.ஆர்., நகர், அண்ணாநகர், நடுமாரியம்மன் கோவில்தெரு, சக்தி மாரியம்மன் கோவில், 34ம் ஆண்டு திருவிழா விமர்சையாக நடந்தது. கடந்த, 7ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 8ம் தேதி, அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், 9ம் தேதி காலை, கங்கை பூஜை, தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்டவை நடந்தது. மதியம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இறுதி நாளான நேற்று, அப்பகுதி மக்கள் மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அன்னதானமும், மாலை, சக்தி அம்மனின் திருவீதி உலா நடந்தது.