கோத்தகிரி: கோத்தகிரியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பங்களிப்புடன், விநாயகர் கோவில் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அவினாசி ஸ்ரீ ஈஸ்வரர் கோவில் சிவாகம சிந்தாமணி குமார சுப்ரமணியம், பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, காணிக்கை செலுத்தி, ஐயனை வழிப்பட்டனர்.