பதிவு செய்த நாள்
14
செப்
2015
10:09
திருவேற்காடு: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், நேற்று நடந்த ஆடி திருவிழா தேரோட்டத்தில் அம்மனுக்கு பூ மாலைகள் சாற்றி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் அம்பத்துார் அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா, நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் எழுந்தருளிய தேர், காலை 7:30 மணியளவில், கோவில் தேரடி யில் இருந்து புறப்பட்டு வீதிகளில் வலம் வந்தது. வாணவேடிக்கையுடன், இசை முழங்க நடந்த தேரோட்டத்தைக் காண, திருவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு பூ மாலைகள் சாற்றி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அம்பத்துார், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.