வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வீர ஆஞ்சயேர் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2015 10:09
காரைக்கால்: காரைக்கால் நித்யக்கல்யாணப்பெருமாள் கோவில் ஆவணி அமாவாசை முன்னிட்டு வீர ஆஞ்சயேர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யக்கல்யாணப்பெருமாள் கோவில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சனேயருக்கு நேற்று முன்தினம் புரட்டாசி ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சம் மகா தீபாராதனை நடைபெற்றது.முன்னதால் ஆஞ்சயேருக்கு பலவகையா திரவாங்களால் ஆபிஷேகம் நடைபெற்றது. பின் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ராவணன் அரசவையில் தூது சென்ற அனுமனுக்கு ராவணன் இருக்கை தர மறுத்ததால் தனது வாலையே கோட்டையாக அமைத்து அதில் வீர ஆஞ்சனேயர் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சனேயரை வழிப்பட்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சிறப்பாக செய்திருந்தது.