புரட்டாசி பூஜைகளுக்காக.. சபரிமலை நடை செப்.16 ல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2015 10:09
சபரிமலை: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 16-ம் தேதி மாலை திறக்கிறது. 21-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். செப்.16 மாலை 5.30-க்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தரிசனத்துக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனத்துக்கு பின் வழக்கமான நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறும். உதயாஸ்தமனபூஜை மற்றும் சகஸ்ரகலசம், களபூஜைகளும் நடைபெறுகிறது. செப்.21 இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். கேரள பஞ்சாங்க முறைப்படி புரட்டாசி ஒன்றாம் தேதி தமிழகத்தை விட ஒரு நாள் முன்னதாக17ம் தேதி வருகிறது. இதனால் சபரிமலை நடை 16-ம் தேதி மாலை திறக்கிறது.