பதிவு செய்த நாள்
14
செப்
2015
11:09
நாமக்கல்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, நாமக்கல்லில் கோலாகலமாக நடந்தது. பக்தர்களை காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கிருஷ்ணர் அவதரித்தார். அவர் அவதரித்த திருநாளை, உலக மக்கள் அனைவரும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல்வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர். விழாவில் சிறப்பு பஜனை மற்றும் அபிஷேகம், தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாமக்கல் இஸ்கான் கோவிலில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, மாலை, 6.30 முதல், இரவு, 8.30 மணி வரை, சத்சங்க நிகழ்ச்சி நடக்கிறது என, சேலம் இஸ்கான் கோவில் நிர்வாகி ஸ்ரீநிவாச கிருஷ்ணதாஸ் கூறினார்.