கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவில் வேப்ப மரத்தில், அம்மன் உருவத்தை வடிவமைத்து கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள், இக்கோவிலை புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடத்தினர்.இதனிடையே கோவில் வளாகத்தில், 40 அடி உயரம் கொண்ட வேப்ப மரத்தில், அம்மன் உருவம் தெரிந்துள்ளது. அதையடுத்து, கிராம மக்கள், வேப்ப மரத்தில் மாரியம்மன் உருவத்தை "தத்ரூபமாக வடிவமைத்து, தோடு, மூக்குத்தி போன்ற அணிகலன்கள் அணிவித்துள்ளனர். வேப்ப மரத்தில் உள்ள அம்மன் சிலையை, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபாடு செய்து வருகின்றனர்.