ஓசூர்: ராயக்கோட்டை துர்க்கையம்மன் கோவில் தீமிதி விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டனர். ஓசூர் அடுத்த ராயக்கோட்டையில் துர்க்கையம்மன் கோவில் உறள்ளது. இந்த கோவில் தீமிதி விழா கடந்த 18ம் தேதி துவங்கி நடந்தது. கடந்த 19ம் தேதி தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தனர். அப்பபோது மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீமிதி விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.