பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
உடுமலை: தீபாலபட்டி, சக்தி விநாயகர் மற்றும் உச்சிமாகாளியம்மன் கோவில், கும்பாபிேஷகம் செப்., 17ல் நடக்கிறது. உடுமலை அருகே தீபாலபட்டியில் அமைந்துள்ளது, சக்தி விநாயகர் கோவில். கோவிலில் திருப்பணி நிறைவடைந்து, கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது. இதற்கான விழா, நாளை மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. மாலை, 4:15 மணி முதல், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், முதல்கால யாக பூஜை நடக்கிறது. செப்., 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, அர்ச்சனை வேள்வி, கணபதி யாகம், கணபதி மூலமந்திர யாகம், நாடி சந்தானம், தீபாராதனை நடக்கிறது. காலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள், மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
உச்சிமாகாளியம்மன் கோவில்: தீபாலபட்டியில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில், சித்தி விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் செப்., 17ல் நடக்கிறது. கும்பாபிேஷக விழா, நாளை இரவு, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. இரவு, 7:15 மணிக்கு, அனுமதி பெறுதல், அங்குரார்ப்பணம், கும்ப ஸ்தாபனம், முதல்கால யாக பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. செப்., 17ம் தேதி காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், இரண்டாம் கால யாக பூஜை, மண்டப அர்ச்சனை, வேதிகா யாகம், மூலமந்திர பிரயோகம், லட்சுமி பூஜை, சுதர்சன ேஹாமம், சொர்ண பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 7:45 மணிக்கு, கலசங்கள் கோவிலை சுற்றி, கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. காலை, 8:00 மணி முதல், 8:30 மணிக்குள், கோபுர கலசம், சித்தி விநாயகர், பாலமுருகன், உச்சிமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷகம் செய்யப்படுகிறது. இதைதொடர்ந்து, மகா அபி ேஷகம், அலங்கார பூஜை, தீபாராதனை, தச தானம், தச தரிசனம் நடக்கிறது. இவ்விரு கோவில்களின் கும்பாபிேஷகத்தை, நல்லசுப்ரமணிய சிவாச்சாரியார் மற்றும் மடத்துக்குளம், கணியூர் சொக்கநாத சுவாமி கோவிலை சேர்ந்த சிவமூர்த்தி சிவம் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.