இஸ்லாமை, தீன் குலம் என்று சொல்வார்கள். அல்லாஹ்வின் கயிறு என்று இதற்கு பொருள். அதாவது அல்லாஹ் விதித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒற்றுமையுடனும், கூட்டமைப்புடனும் திகழும் கொள்கைக்கு தீன் எனப்பெயர். குர்ஆனில், நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்த்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்து பாருங்கள், என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ்வே ஏக இறைவன் என்ற பொருளும் இதற்கு உண்டு.