பதிவு செய்த நாள்
16
செப்
2015
11:09
சேலம்: ஆத்தூர், ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆத்தூர், கீரிப்பட்டி, ஜங்கமசமுதாய ஸ்ரீ அகோர வீரபத்திரர், ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், காலை 5 மணிக்கு, திருபள்ளியெழுச்சி, சோம பூஜை, செய்து நாடி சந்தானம் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, மகா பூர்ணாஹுதி, உபசாரம், யாத்ராதானம் மற்றும் கடன் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவிலில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. பிறகு மகாதீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.