பதிவு செய்த நாள்
22
செப்
2015
11:09
அன்னுார்: வரதையம்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அன்னுார் அடுத்த காட்டம்பட்டி வரதையம்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மேட்டுப்பாளையம் வாசுதேவன் குழுவினர், கோட்டைபாளையம், குன்னத்துார் பிருந்தாவன பஜனை குழுவினரின் பஜனை நடந்தது.மதியம் தமிழ் மாத முதல் சனிக்கிழமை குலதெய்வ வழிபாட்டு குழுவினர் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை ஹோமம், பூர்ணாஹுதி நிறைவுற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.