பதிவு செய்த நாள்
24
செப்
2015
11:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கையாக, ரூ.73 லட்சத்து, 58 ஆயிரத்து, 568 வசூலானது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து ஸ்வாமி தரிசனம் செய்து கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவர். உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில், 73லட்சத்து 58ஆயிரத்து. 568 ரூபாய் ரொக்கம், தங்கம் 187 கிராம், வெள்ளி 535 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில், கோவில் ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். உண்டியல் எண்ணும் பணி, 14 கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.