ஈரோடு: கோட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண வைபவத்தின் போது, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்துாரி அரங்கநாதர் சர்வ அலங்காரத்தில் காட்சியருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.